துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் இன்று அதிகாலை வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறையினா் சோதனையிட்டனர்.
அப்போது திருச்சியைச் சோ்ந்த அலி சிராஜுதீன் (36), பாபு பாட்ஷா (20), சென்னையைச் சோ்ந்த முகமது கடாபி (49) ஆகிய மூவர் மீது சுங்கத் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்களைச் சுங்கத் துறையினர் தனி அறைகளுக்குக் கூட்டிச் சென்று சோதனையிட்டனா்.
அப்போது அவர்கள் உள்ளாடைகளில் மறைத்துவைத்திருந்த 1.8 கிலோ தங்கத்தைப் பறிமுதல்செய்தனா். அதன் சர்வதேச மதிப்பு ரூ.90.5 லட்சம் இருக்கும் எனக் கருதப்படுகிறது. தற்போது, மூவரையும் கைதுசெய்த சுங்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.