தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்றானது அதிகரிப்பதால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவீஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் புனே, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களிலிருந்து கரோனா தடுப்பூசி தமிழ்நாடு கொண்டுவரப்படுகின்றன. இந்நிலையில் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த ஸ்பைஸ்ஜெட் ஏா்லைன்ஸ் விமானத்தில் மூன்று லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமான நிலையம் வந்தடைந்தன.
தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாடு சுகாதாரத் துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து குளிர்சாதன வாகனங்கள் மூலம் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு தடுப்பூசிகள் கொண்டுசெல்லப்படுகின்றன.
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான தீரா வன்கொடுமை: அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!