ETV Bharat / state

புனேவிலிருந்து சென்னை வந்தடைந்த 3.99 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் - சென்னை விமான நிலையம்

புனேவில் இருந்து 3 லட்சத்து 99 ஆயிரம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தது

g
g
author img

By

Published : Jun 19, 2021, 9:37 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'கோவேக்சின்' தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட' கோவீஷீல்டு' தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மக்களுக்கு போட தடுப்பூசிகள் இல்லாததால் தட்டுபாடு ஏற்ப்பட்டன. இதனால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தியது.

இந்நிலையில், புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 27 பார்சல்களில் சுமார் 3 லட்சத்து 10 ஆயிரத்து 150 கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தன. இதனை சுகாதாரத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்க்கு கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: தடுப்பூசிக்காக நீண்ட நேரம் காத்திப்பு: டோக்கன் வழங்காததால் காலணியை வைத்து இடம்பிடித்த மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.