ETV Bharat / state

சென்னை வந்தடைந்த 3.31 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் - chennai latest news

புனேவில் இருந்து 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம் மூலம் மூன்று லட்சத்து 31 ஆயிரத்து 430 கோவீஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்தன.

விமானத்தில் வந்திறங்கிய கோவிஷீல்ட் தடுப்பூசிகள்
விமானத்தில் வந்திறங்கிய கோவிஷீல்ட் தடுப்பூசிகள் விமானத்தில் வந்திறங்கிய கோவிஷீல்ட் தடுப்பூசிகள்
author img

By

Published : Aug 6, 2021, 3:41 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வும் மக்களிடையே அதிகரித்துள்ளதால், தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு, இரண்டாம் டோஸ் தடுப்ப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்கக்கோரி, ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தார்.

விமானத்தில் வந்திறங்கிய கோவிஷீல்ட் தடுப்பூசிகள்
விமானத்தில் வந்திறங்கிய கோவிஷீல்ட் தடுப்பூசிகள்

விமான நிலையம் வந்தடைந்த தடுப்பூசிகள்

இந்நிலையில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 28 பார்சல்களில், மூன்று லட்சத்து 31 ஆயிரத்து 430 கோவீஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தடுப்பூசி பார்சல்களை சென்னை விமான நிலைய அலுவலர்கள், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனா்.

அவை குளிா்சாதன வாகனங்களில் ஏற்றப்பட்டு, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்துக்கு கொண்டு செல்லபட்டன. தடுப்பூசிகள் தேவைக்கு ஏற்ப தமிழ்நாடு முழுவதும் பிரித்து அனுப்பப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஏறுமுகம் காணும் கரோனா: மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.