சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்திவரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து துபாய் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த நைனா முகமது (41), திருச்சியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (49), அஜுத் அகமது (26) ஆகிய மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் உடமைகளைச் சோதனை செய்தனர். அதில் 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 19 விலையுர்ந்த செல்போன்கள், 51 சிகரெட்டு பெட்டிகள், 18 மடிக்கணினிகள் ஆகியவை இருந்தன.
பின்னர் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தபோது, அவர்களது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்துவைத்து கடத்திவந்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ 420 கிராம் எடை கொண்ட தங்கத்தைப் பறிமுதல்செய்தனர். மேலும் மூன்று பேரையும் கைதுசெய்த சுங்கத் துறை அலுவலர்கள், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.30 லட்சம் மதிப்பிலான 600 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்!