இதுதொடர்பா, தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலர் பிறப்பித்துள்ள உத்தரவில்,
சென்னை தெற்கு கூடுதல் ஆணையராக இருந்த மகேஷ் குமார் அகர்வால், காவல் துறை ஆபரேஷன் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும், மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் ஏ.டி.ஜி.பியாக வினித் தேவ் வாங்டே பதவி உயர்வு பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், சைபர் க்ரைமிற்கு என தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு அதற்கு ஏ.டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் என்பவருக்குப் பதவி உயர்வு அளித்து நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், டி.ஜி.பி. கரன் சின்ஹா-வை காவல் துறை கல்லூரி டி.ஜி.பி.யாகவும், முக்கியமாக பல ஆண்டு காலமாக உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஈஸ்வர மூர்த்தியை, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று, டி.ஐ.ஜி. உளவுத்துறையாகக் கண்ணன் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையைப் பொறுத்தவரை தெற்கு கூடுதல் ஆணையராக பிரேமானந்த் சின்ஹாவும், மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் அன்பு, சென்னை காவல் நிர்வாகத்துறை ஐ.ஜி.யாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும், சென்னை போக்குவரத்து இணை ஆணையர் சுதாகர், சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ரயில்வே டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன், திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். மேலும், டி.ஐ.ஜி. செந்தில்குமார் ஐ.ஜியாக பதவி உயர்வு கொடுத்து சேலம் ஆணையராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். சேலம் மாநகர ஆணையர் சங்கர், சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
இது போன்று, 26 ஐ.பி.எஸ். அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், காவல் கண்காணிப்பாளர்களுக்கும் பணியிட மாற்றம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.