76 இந்தியர்களுடன் அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து புறப்பட்ட சிறப்பு மீட்பு விமானம் நேற்றிரவு சென்னை வந்தது. அதில் 36 ஆண்கள், 30 பெண்கள், எட்டு சிறுவர்கள், இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
இவர்கள், அனைவருக்கும் சென்னை விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்களில் அரசின் இலவச தங்குமிடங்கள் தங்க யாரும் கேட்காததால், 76 பேரும் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான சென்னை நகர ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டனர். அதேபோல், 179 இந்தியர்களுடன் அபுதாபியிலிருந்து புறப்பட்ட சிறப்பு மீட்பு விமானம் இன்று அதிகாலை சென்னை வந்தது.
அதில் 101 ஆண்கள், 65 பெண்கள், எட்டு சிறுவா்கள், ஐந்து குழந்தைகள் என அனைவருக்கும் விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் அரசின் இலவச தங்குமிடங்களான சவீதா மருத்துவ கல்லூரிக்கு 77 பேரும்,101 போ் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான சென்னை நகர ஹோட்டல்களுக்கும், ஒருவா் சிறப்பு அனுமதி பெற்று நெய்வேலிக்கும் அனுப்பப்பட்டனர்.
இதையும் படிங்க: இலங்கை தாதா கோவையில் மர்ம மரணம், மதுரையில் உடல் எரிப்பு!