ETV Bharat / state

ரூ.25 கோடி வரி ஏய்ப்புசெய்த திமுக வேட்பாளர் எ.வ. வேலு

சென்னை: திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் 25 கோடி ரூபாய் வருமானத்தைக் குறைத்து காட்டிருப்பது தெரியவந்துள்ளது.

AV Velu
எ.வ. வேலு
author img

By

Published : Mar 29, 2021, 8:23 PM IST

தற்போது திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக இருப்பவர் எ.வ. வேலு. இவர் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கிடைத்த புகாரின்பேரில், வருமானவரித் துறையினர் அவருக்குச் சொந்தமான 18 இடங்களில் கடந்த 25ஆம் தேதி சோதனையைத் தொடங்கினர்.

குறிப்பாக, திருவண்ணாமலையில் உள்ள எ.வ. வேலுவுக்குச் சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை, நிதி நிறுவனம், சென்னை ஆழ்வார்பேட்டை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இரண்டு நாள்கள் நீடித்த சோதனையில், கணக்கில் வராத 3.5 கோடி ரூபாய் பணத்தை வருமானவரித் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும், 25 கோடி ரூபாய் வருமானத்தைக் குறைத்துக் காட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது.

கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் அதிகப்படியான கல்விக் கட்டணத்தை வாங்கிவிட்டு, குறைவாக வாங்கியதுபோல் காட்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை, கல்லூரி, நிதி நிறுவனம் போன்றவற்றின் வரவு செலவுக் கணக்குகள் குறித்து வருமானவரித் துறையினர் எ.வ. வேலுவிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுமட்டுமில்லாமல் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பென் டிரைவ்கள் குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர். எ.வ. வேலுவிற்கு அழைப்பாணை கொடுத்து நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் வருமானவரித் துறையினர் முடிவுசெய்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திருவண்ணாமலையில் எ.வ. வேலுவிற்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொள்ள வந்தபோது, கல்லூரியில் அவர் தங்கியிருந்த அறையிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கு 4 ஆண்டுகள் சிறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.