ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (செப்டம்பர் 3) சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் கலந்துகொண்டு மாணவர்களிடம் பேசினார்.
அப்போது, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தால் எங்கு சென்று முறையிட வேண்டும் என்பது குறித்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், சமூக வலைதளங்களைப் பாதுகாப்பாக எவ்வாறு கையாளுவது என்பது குறித்தும் விளக்கினார்.
குழந்தைத் திருமணம் தொடர்பாக இந்த ஆண்டு மட்டும் ஐந்து வழக்குகளும், 68 போக்சோ வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 700 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த இரண்டு மாதங்களில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 25 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது எனவும் பேசினார்.
இதையும் படிங்க: லாக்டவுனில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பு - அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்