ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 2,312 பேருக்கு கரோனா உறுதி - கரோனா பாதிப்பு அதிகரிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 2,312 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 2,312 பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Jul 15, 2022, 9:33 PM IST

சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் ஜூலை 15ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 32 ஆயிரத்து 164 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 2,311 நபர்களுக்கும் அந்தமான் நிக்கோபார் தீவில் இருந்து வந்த ஒருவருக்கும் என 2,312 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 64 லட்சத்து 29 ஆயிரத்து 390 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதனால் 35 லட்சத்து 13 ஆயிரத்து 121 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17,487 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2,682 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 57 ஆயிரத்து 605 என உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த 71 வயது முதியவர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி மேலும் அவர் இறந்துள்ளார் என பொது சுகாதாரத்துறை இயக்குநராகம் அறிவித்துள்ளது. அவருக்கு பல்வேறு இணை நோய்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 38,029 என உயந்துள்ளது.

மேலும் சென்னையில் 618 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 360 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 153 நபர்களுக்கும் காஞ்சிபுரத்தில் 76 நபர்களுக்கும் கன்னியாகுமரியில் 50 நபர்களுக்கும் திருவள்ளூரில் 168 நபர்களுக்கும் திருநெல்வேலியில் 68 நபர்களுக்கும் தூத்துக்குடியில் 54 நபர்களுக்கும் சேலத்தில் 83 நபர்களுக்கும் என தமிழ்நாடு முழுவதும் 2,312 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 2,269 பேருக்கு கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.