ETV Bharat / state

'நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு' - அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்! - Resolution seeking exemption from extension

சென்னை: அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்தல் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

23 தீர்மானங்கள்
author img

By

Published : Nov 24, 2019, 12:43 PM IST

Updated : Nov 24, 2019, 2:22 PM IST

2017ஆம் ஆண்டு கூடிய பொதுக்குழு, செயற்குழு:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இணைப்புக்குப் பின் கடந்த 2017 செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. அப்போது நடைபெற்ற பொதுக்குழுவில், சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டதுடன், சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரனின் பதவி உள்ளிட்ட சிலரின், அதிமுக உறுப்பினர் பதவியும் ரத்து செய்யப்பட்டது. பின்னர், அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கே கட்சியை வழிநடத்த முழுஅதிகாரம் உண்டு என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். கஜா புயல் காரணமாக 2018ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறவில்லை.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு கூடிய பொதுக்குழு, செயற்குழு:

இதற்கிடையே, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு.
* இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்.
* மருத்துவ மேற் படிப்புகளில் பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தல்
* தமிழ்நாடு அரசுக்குத் தரவேண்டிய பெரும்தொகையை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும்.
* கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தமிழர்களின் தொன்மையை உலகறிய செய்த தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு.

* காவிரி, கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை.

* அதிமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.
* தொழில் முதலீடுகளை ஈர்க்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டுப் பயணம் ஆகியவற்றிற்காக தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு.
* தமிழ்நாடு நாள் கொண்டாடிய தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு தெரிவித்து தீர்மானம்.

* சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியதற்கு மத்திய அரசுக்கு நன்றி.
* விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சுக்குப் பாராட்டு.
* மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி.

* பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு.
* இருமொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் கல்வி முறையில் அதிமுக அரசு பயணிக்கும் என்பதில் உறுதி.
* உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு அனைவரும் உழைத்திட வேண்டும் என தீர்மானம்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகுமாறு தொண்டர்களுக்கு, அதிமுக அழைப்பு விடுத்தது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தொடங்கியது அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம்!

Intro:Body:

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் அமைந்திருக்கக் கூடிய ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறவுள்ளது.

சாலைகளில் அனுமதியின்றி பேனர் வைக்க கூடாது என்ற நீதிமன்றத்தின் தடை இருப்பதால் பெரும்பாலும் எந்த இடங்களிலும் பேனர் வைக்கப்படாமல் காணப்படுகிறது.

வானநகரத்திற்கு முன்பாக இருக்கக்கூடிய மதுரவாயில் துவங்கி ஸ்ரீவாரு திருமண மண்டபம் வரை சாலையின் நடுவே சவுக்கு கம்பங்கள் அமைத்து அதிமுக கொடியுடன் ஜெயலலிதா புகைப்படம் இடம்பெற்ற தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது( பேப்பர் தோரணம்)

மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் கோவில் போன்ற வடிவத்தில் அரங்கம் அமைக்கப்பட்டு யானை சிலைகள் வைக்கப்பட்டு வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவில் போன்ற அரங்கத்திற்கு முன்பாக பத்திற்கும் மேற்பட்ட இரும்பு பலகைகள் போட பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

அதேபோல ஸ்ரீவாரு திருமண மண்டபம் அமைந்துள்ள சாலையில் தென்னை ஓலைகள் மூலம் ஏற்பாடு செய்து அதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னிர்செல்வம் ஆகியோர் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.

தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம்,கரகாட்டம், பொய்க்கால் குதிரை, கேரளா செண்ட மேளம், குதிரை வரவேற்பு,அதிமுக தலைமை அலுவலகம் போன்ற முகப்பு,பேப்பர் கொடிகள் அசையும் யானைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

அதேபோல பல்வேறு இடங்களில் வரவேற்பிற்கு நடனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Conclusion:
Last Updated : Nov 24, 2019, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.