ETV Bharat / state

ஹாக்கி உலகக் கோப்பை பயணம்; முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற வீரர்கள்! - முதலமைச்சர் ஸ்டாலின்

ஒடிஷா மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான கோப்பையை, இந்திய ஹாக்கி செயலாளர் சேகர் மனோகரன் உள்ளிட்டோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

2023
2023
author img

By

Published : Dec 21, 2022, 1:41 PM IST

சென்னை: உலகக்கோப்பை ஹாக்கி போட்டி, ஒடிஷா மாநிலம் ரூர்கேலாவில் ஜனவரி 13ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து உலகக்கோப்பை ஹாக்கி போட்டியை பிரபலப்படுத்தும் வகையில், ஹாக்கி கோப்பை இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் ஹாக்கி கோப்பை விமானம் மூலம் இன்று(டிச.21) சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தமிழ்நாடு ஹாக்கி சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் ஹாக்கி கோப்பையை வரவேற்றனர்.

இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில், இந்திய ஹாக்கி செயலாளர் சேகர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள், ஹாக்கி கோப்பையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். பின்னர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் முதலமைச்சர் வழங்கினார்.

இந்த கோப்பையானது, தமிழ்நாட்டின் முன்னணி ஹாக்கி வீரர்கள் உள்ளிட்டோரால் அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஓ.பி வைஷ்ணவா மகளிர் கல்லூரி ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, மாலை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அங்கு, பாரம்பரிய முறையில் மேள தாளங்கள் முழங்க கோப்பைக்கும் வீரர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

பின்னர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி மற்றும் காவல்துறை அணிகளிடையே சிறப்பு கண்காட்சி போட்டி நடைபெறவுள்ளது. கண்கவர் கலைநிகழ்சிகளும் நடைபெறவுள்ளன. அதனையடுத்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹாக்கி உலகக் கோப்பையை கேரளா ஹாக்கி நிர்வாகிகளிடம் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்த 15 நாட்களில், தமிழ்நாடு முழுவதும் 100 பள்ளிகளில் விழிப்புணர்வு ஹாக்கி போட்டிகளை இந்திய ஹாக்கி அமைப்பு, தமிழ்நாடு ஹாக்கி சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தவுள்ளது.

இதையும் படிங்க: சென்னைக்கு வந்த ஹாக்கி உலகக் கோப்பை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.