ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு முன்னாள் துணைவேந்தர்கள் கடிதம் - புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக துணைவேந்தர்கள் கடிதம்

சென்னை: புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதன் பின்னணியில் மத்திய அரசுக்கு மறைமுக திட்டம் உள்ளதாக முன்னாள் துணைவேந்தர்கள் 20 பேர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

vc letter to pm on nep
புதியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு முன்னாள் துணைவேந்தர்கள் கடிதம்
author img

By

Published : Sep 13, 2020, 5:26 PM IST

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராமசாமி, சென்னை பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்கள் சாதிக், இக்னாசி முத்து, வேளாண்மை பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் முருகேச பூபதி, ராமசாமி, மனோன்மணியம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் வசந்திதேவி, சபாபதிமோகன், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் பொன்னவைக்கோ, ஜெகதீசன் உள்ளிட்ட 20 துணைவேந்தர்கள் பிரதருக்கு புதியக் கல்விக் கொள்கையில் உள்ள பிரச்னைகள் குறித்து கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும், அந்தக் கடித்தின் நகலை மத்திய கல்வி அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில், "ஐந்து வயதிற்கு முன்னதாக குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது குழந்தைகளின் நலனை பாதிக்கும். 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டுவரும் நடைமுறை சரியல்ல. தொழில் கல்வி முறையை அறிமுகப்படுத்துவது மாணவர்களை தற்போதைய கல்வி முறையில் இருந்து வெளியேற்றும்.

தேர்வு முறையில் கொண்டுவரப்பட உள்ள மாற்றத்தினால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும். 5ஆம் வகுப்பு வரை ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வருவது தேவையற்றது. இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கொண்டு வருவது மாணவர்களை உயர்கல்வி பெறுவதை தடுக்கும். இரண்டு ஆண்டுகள் கல்லூரியில் படித்து விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும் என்பது முழுமையான கல்விக்கு வழிவகுக்காது.

5 ஆயிரத்திற்கும் குறைவாக மாணவர் எண்ணிக்கை கொண்ட கல்லூரிகள் மூடப்படும் என்பது கிராமப்புறங்களில் உள்ள கல்லூரிகள் மூடப்படுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி கிராமப்புற மாணவர்கள் உயர் கல்வி பயில்வதை தடுக்கும் நடவடிக்கை. புதிய கல்விக் கொள்கையில் மற்ற மொழிகளை தாழ்த்தி சமஸ்கிருதத்தை ஊக்குவிப்பது போன்ற அம்சம் இடம்பெற்றிருப்பது பன்மொழி தன்மை கொண்ட நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும். இட ஒதுக்கீடு குறித்து தெளிவான அம்சங்கள் குறிப்பிடபடவில்லை.

புதிய கல்விக் கொள்கை கல்வி தொடர்பாக தற்போது மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களை முழுவதுமாக பறித்து மத்தியில் அதிகாரங்களை குவிக்கின்ற நடவடிக்கையாக உள்ளது. புதிய கல்விக் கொள்கை அநீதி, சமத்துவமின்மை மற்றும் ஆரிய பாரம்பரியத்திற்கு கொண்டு சேர்க்கும்" என குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஒரு உசுருக்கு மதிப்பில்லையா?’ - நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் உயிரிழந்த மாணவனின் தந்தை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.