சென்னை: தமிழக காவல்துறையில் இரண்டு டிஜிபிக்கள் உட்பட 20 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று (டிச.30) உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்டி, தீயணைப்பு துறை டிஜிபியாக இருந்த பிரஜ் கிஷோர் ரவி விடுமுறையில் இருந்து வந்த நிலையில், தற்போது ஊர் காவல்படை டிஜிபியாக பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
![விடுமுறையில் இருந்த டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி - ஊர்காவல்படை டிஜிபியாக மாற்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-dgptransfer-script-7202290_30122022201744_3012f_1672411664_880.jpg)
அதே போல குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை டிஜிபியாக இருந்த ஆபாஷ் குமாரை தீயணைப்பு துறை டிஜிபியாக நியமனம் செய்துள்ளது. மேலும் சென்னை தலைமையிட ஏடிஜிபி வெங்கட்ராமன் சென்னை நிர்வாக பிரிவு ஏடிஜிபியாகவும், அமலாக்கப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் பொருளாதார குற்றத் தடுப்புப்பிரிவு ஐஜி ஆகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
மதுரை காவல் ஆணையராக இருந்த செந்தில்குமார் சென்னை டிஜிபி அலுவலக பொதுப்பிரிவு ஐஜியாகவும்,
திருப்பூர் காவல் ஆணையர் பிரபாகரன் சென்னை சமூக நலன் பிரிவு ஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கோயம்புத்தூர் சரக டிஐஜி முத்துசாமி வேலூர் சரக டிஐஜி-யாகவும், தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழி கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாகவும், கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி சின்னசாமி டெக்னிக்கல் பிரிவு டிஐஜியாகவும் நியமனம் செய்துள்ளனர்.
தூத்துக்குடி போலீஸ் தேர்வு பள்ளி முதல்வர் ராஜராஜன் சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராகவும், சென்னை தலைமையிட துணை ஆணையர் எஸ்.ஆர்.செந்தில்குமார் தென்காசி மாவட்ட எஸ்பி ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலைச்செல்வன் முத்தலீஃப் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாகவும், தர்மபுரி மாவட்ட எஸ்பி ஆகவும், சிவகுமார் சேலம் மாவட்ட எஸ்பி ஆகவும், முத்தரசி தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி ஆகவும், ரவளிப்பிரியா சென்னை சிபிசிஐடி எஸ்பி ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜெயலட்சுமி ஆவடி போக்குவரத்துக் காவல் பிரிவு துணை ஆணையராகவும், சென்னை டிஜிபி அலுவலக சட்டம் ஒழுங்கு ஏ.ஐ.ஜியாகவும், அருளரசு எஸ்பிசிஐடி, எஸ்.பி ஆக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ETV Bharat 2022 Roundup: சென்னை விமானநிலையம் சந்தித்த சாதனைகளும் சோதனைகளும்