ETV Bharat / state

அம்பத்தூர் அருகே சாலையில் 20 அடியில் திடீர் ராட்சத பள்ளம்..! பொதுமக்கள் பீதி - 20 feet giant pothole

Pothole in Chennai: சென்னை பெருநகர மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம், 82 வது வார்டுக்கு உட்பட்ட மேனாம்பேடு- கருக்கு செல்லும் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

pothole in Chennai
சாலையில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 12:04 PM IST

அம்பத்தூர் அருகே சாலையில் 20 அடியில் திடீர் ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி

சென்னை: அம்பத்தூர் - கருக்கு இடையேயான பிரதான சாலையின் நான்கு முனை சந்திப்பு பகுதியில், சுமார் 20 அடி ஆழத்தில், 8 அடி அகலத்திற்கு சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இச்சம்பவம் சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 7, 82வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இச்சம்பவம் இன்று (ஜன.4) அதிகாலை நடந்துள்ளது. மேலும், நல்வாய்ப்பாக எந்தவிதமான ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.

இதனை அடுத்து, இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரோந்து பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள், உடனடியாக தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் உள்ளே வராத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி உட்பட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆகியோர் விரைந்து வந்தனர். சாலையில் ஏற்பட்டிருந்த ராட்சத பள்ளம் குறித்து ஆய்வு செய்து, அதனை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: அன்றாட உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்

இதனிடையே ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டு, திடீர் பள்ளத்தை சுற்றிய சாலையை முழுவதுமாக அகற்றி, சாலையை முற்றிலுமாக சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், மேனாம்பேடு - கருக்கு இடையேயான பிரதான சாலை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது அம்பத்தூர் மற்றும் பட்டரவாக்கம், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை போன்ற பகுதிகளை இணைக்கக்கூடிய முக்கிய சாலையாக உள்ளது. அதோடு பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் சுற்றி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் இதேபோல் கொரட்டூரில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது அம்பத்தூர் பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் நரேந்திர மோடி கையால் பட்டம் பெற்றது மகிழ்சி - பட்டதாரி மாணவி நெகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.