ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: பத்திரப்பதிவுத்துறையில் 2 பேர் இடைநீக்கம்

சென்னை: குரூப்-2 ஏ தேர்வில் முறைகேடு செய்து பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றிய இரண்டு பேர்  காவல்துறையால் கைது செய்யப்பட்டதினால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

2 suspended in the record industry
2 suspended in the record industry
author img

By

Published : Feb 3, 2020, 8:33 PM IST

குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி காவல்துறையிடம் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் செயலாளர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி அளித்தப் புகாரில், முறைகேட்டில் ஈடுபட்டு 42 பேர் அரசுப் பணிகளில் உள்ளனர் எனக் கூறியிருந்தது.

அதனைத் தொடர்ந்து இதுசம்பந்தமாக விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி அதிகாரிகள் பிப்ரவரி ஒன்றாம் தேதி காரைக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த வேல்முருகன், திருநெல்வேலி மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த ஜெயராணி ஆகியோரை கைது செய்தனர்.

அரசுப் பணியாளர் தேர்வு நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில், காவல்துறையால் கைது செய்யப்பட்டவர் 48 மணி நேரத்திற்கும் மேல் காவல்துறை பாதுகாப்பில் இருந்தால் அவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும்.

அதன் அடிப்படையில் காரைக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த வேல்முருகன், திருநெல்வேலி மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த ஜெயராணி ஆகியோரை பத்திரப்பதிவுத் துறை தலைவர் ஜோதி நிர்மலா இன்று இடைநீக்கம் செய்யும் படி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட, மற்ற அரசுத்துறை பணியாளர்களையும் இடைநீக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தகவலளித்துள்ளது.

இதையும் படிங்க: ‘டிஎன்பிஎஸ்சி முறைகேட்டிற்குப் பொறுப்பேற்று ஜெயக்குமார் பதவி விலக வேண்டும்’

Intro:பத்திரப்பதிவு துறையில் 2 பேர் சஸ்பெண்ட்

Body:சென்னை,

குரூப்-2 ஏ தேர்வில் முறைகேடு செய்து பத்திரப் பதிவுத் துறையில் பணியாற்றிய காவல்துறையால் கைது செய்யப்பட்ட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீஸாரிடம் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் செயலாளர் ஜனவரி 31-ம் தேதி புகார் அளித்தார். அந்தப் புகாரில் குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு 42 பேர் அரசுப் பணிகளில் உள்ளனர் என கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு சிபிசிஐடி அதிகாரிகள் பிப்ரவரி 1ஆம் தேதி காரைக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த வேல்முருகன், திருநெல்வேலி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த ஜெயராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அரசு பணியாளர் தேர்வு நடத்தி விதிமுறைகளின் அடிப்படையில் காவல் துறையால் கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு மேல் காவல்துறை பாதுகாப்பில் இருந்தால் அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

அதன் அடிப்படையில்காரைக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த வேல்முருகன், திருநெல்வேலி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த ஜெயராணி ஆகியோரை பத்திரப்பதிவு துறை தலைவர் ஜோதி நிர்மலா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.