சென்னை கேளம்பாக்கம் அருகே வசித்து வருபவர் என்சிசி அதிகாரியான ஆறுமுகம். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. நேற்றிரவு நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வீடு வாடகை கேட்டு ஆறுமுகத்தை அணுகியுள்ளனர்.
அந்த இளைஞர்களிடம் ஏதாவது ஒரு ஆவணத்தை கேட்டபோது. தங்களிடம் எந்த ஆவணமும் இல்லையென்று கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ஆறுமுகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இரண்டு இளைஞர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், அந்த இரண்டு இளைஞர்களின் மீதும் ஏற்கனவே மதுரவாயல் காவல் நிலையத்தில் கொள்ளை வழக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த இளைஞர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : போதைப் பொருள் சப்ளை செய்த கும்பல் கைது!