சென்னை: தனியார் தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் விளையாட்டு பயிற்சியின்போது வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக அவரிடம் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவி அளித்த புகாரில் கடந்த 29ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
ஏற்கெனவே, கடந்த 6ஆம் தேதி தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது 3 வீராங்கனைகள் எழுத்துப் பூர்வமான புகார் அளித்திருந்தனர். இந்தநிலையில், தற்போது மேலும் 2 வீராங்கனைகள் நாகராஜன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுத்துப்பூர்வமான புகாரை இன்று அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: தடகள பயிற்சியாளர் நாகராஜனை ஜூன் 11 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு