சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கையிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த ஆகாஷ்காந்த்(23) என்பவரின் உள்ளாடைக்குள் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 824 கிராம் தங்கத்தை மறைத்து வைத்துள்ளது தெரியவந்தது.
அதேப்போல் சென்னையைச் சேர்ந்த முகமது இப்ராகீம்(58) என்பவர் குடையில் மறைத்து கடத்தி வந்த 11 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 268 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து அபுதாபியிலிருந்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சவுக்கத் அலி(32) என்பவரிடமிருந்து, ரூ.18 லட்சம் மதிப்புள்ள 426 கிராம் தங்கத்தையும், மலேசியா விமானப் பயணிகளான சென்னை ஜம்மா கான்(49), ரகீம்(48) ஆகியோரிடமிருந்தும், ரூ. 21 லட்சம் மதிப்புள்ள 503 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: இலங்கை, துபாயிலிருந்து கடத்திவந்த ரூ.1.24 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்