சென்னை: வில்லிவாக்கம் வீ ஷேப் மைதானத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக அப்பகுதி வீ-1 காவல் நிலையம் ஆய்வாளர்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது 6 பேர் ஆயுதங்களுடன் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 6 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்கட்ட தகவலில், கைது செய்யப்பட்டப்படவர்கள் வில்லிவாக்கத்தை சேர்ந்த சரவணன் (எ) ஆடு சரவணன் (23), ஆனந்த் (எ) எலி ஆனந்த் (20), கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(23), நியூ ஆவடியை சேர்ந்த பாபு(23), TTP காலனி பட்டரை வாக்கத்தை சேர்ந்த நிதிஷ்குமார் (எ) நிதிஷ்(20), பிரசாந்த் (21) என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் எடை 2 கிலோ, அதோடு 4 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க:புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து- 10 பேர் படுகாயம்