சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை எம்சிஎம் கார்டனில் வசிப்பவர் நரேஷ்குமார். இவர் கடந்த (ஜூலை 11) ஆம் தேதி இரவு 11.30 மணி அளவில் அவரது வீட்டின் வெளியே செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் நரேஷ்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நரேஷ் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இருவர் கைது
விசாரணையில் நரேஷ்குமாரிடம் செல்போனை பறித்து சென்றது சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ராக்கி என்கின்ற ராஜேஷ் (29), மற்றொருவர் பின்னா என்கின்ற அசாருதீனம் (23) என்பது தெரியவந்தது.
இருவரையும் காவல் துறையினர் நேற்று (ஜூலை 13) கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யபட்ட இருவர் மீதும் ஏற்கனவே கொலை, கொள்ளை, திருட்டு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சம்பவமே நடைபெறவில்லை: பழனி பாலியல் வன்முறை விவகாரத்தில் புதிய திருப்பம்!