சென்னையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவன், கேரள மாநிலத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகளிடம் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகி, அவர்களின் ஆபாசப்படங்களை வாங்கி, சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துவிடுவதாக கூறி மிரட்டி வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இரண்டு சிறுமிகளும், கேரள மாநில சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கேரள காவல் துறையினர், தமிழ்நாடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் புனித தோமையார் மலை மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, 19 வயது மாணவனை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சென்னையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மாணவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பழங்குடியினப் பெண்ணின் ஆடைகளை கிழித்து தாக்குதல்... கர்நாடகாவில் கொடூரம்...