ETV Bharat / state

7.5% இடஒதுக்கீடு: காத்திருப்பு பட்டியலில் 180 மாணவர்கள்!

author img

By

Published : Nov 19, 2020, 8:33 PM IST

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களில் 180 பேர் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மருத்துவ படிப்பில் 180 மாணவர்கள் காத்திருப்பு பட்டியல்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு முதல்முறையாக அளிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கலந்தாய்வில் நவம்பர் 18ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரிகளில் 224 எம்பிபிஎஸ் இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நான்கு இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 7 இடங்களும் நிரம்பின. இவர்களுக்கான மொத்தமுள்ள 405 இடங்களில் 235 இடங்கள் நிரம்பின.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டிற்கு இரண்டாம் நாள் கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இதற்கு 374 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 303 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் காலியாக இருந்த மூன்று எம்பிபிஎஸ் இடங்களும் இன்று மாணவர்கள் தேர்வு செய்தனர். அதேபோல் தனியார் மருத்துவக் கல்லூரியில் காலியாக இருந்த 82 எம்பிபிஎஸ் இடங்களையும் மாணவர்கள் தேர்வுசெய்தனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கு இன்று நடைபெற்ற கலந்தாய்வில் 123 தேர்வு செய்து ஒதுக்கீட்டு ஆணை பெற்றுள்ளனர். கலந்தாய்வில் வேறு கல்லூரியில் இடம் கிடைத்தால் சேர்வதற்கு தயாரென 180 பேர் காத்திருப்பு பட்டியலில் இன்று மட்டும் வைத்துள்ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 227 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 86 இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரியில் உள்ள 12 இடங்களும் நிரம்பியுள்ளன.

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 80 இடங்களில் 33 இடங்கள் நிரம்பியுள்ளன. 47 இடங்கள் காலியாக உள்ளன என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழுச் செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.