சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், கட்சியின் கொள்கை - குறிக்கோள் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் 18 பேரை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
முக்கியமாக ஓ.பன்னீர்செல்வம் மகனும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் மற்றும் ஓபிஎஸ்சின் இளைய மகன் ஜெயபிரதீப் ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மக்களவைக்கு அதிமுக சார்பில் தேர்வான ஒரே எம்.பி. ரவீந்தரநாத் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.என்.பி.வெங்கட்ராமன், ஆர்.டி.ராமச்சந்திரன், எம்.ஜி.எம்.சுப்ரமணியன், ஓம்சக்தி சேகர், கோவை செல்வராஜ், முன்னாள் எம்பிக்களான ரா.கோபாலகிருஷ்ணன், சையதுகான், அதிமுகவின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த மருது அழகுராஜ், எஸ்.ஏ.அசோகன், அம்மன் பி.வைரமுத்து, டி.ரமேஷ், பி.விணுபாலன், கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி, சைதை எம்.எம்.பாபு மற்றும் எஸ்.ஆர்.அஞ்சுலட்சுமி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு!