ETV Bharat / state

COVID 19 in TN: தமிழ்நாட்டில் ஒரேநாளில் 1,728 பேருக்கு கரோனா உறுதி - தமிழ்நாட்டில் ஒரு நாள் கரோனா பாதிப்பு

COVID 19 in TN: தமிழ்நாட்டில் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. புதிதாக 1,728 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் ஒமைக்ரான் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 121 நபர்களில் 100 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கரோனா
கரோனா
author img

By

Published : Jan 3, 2022, 9:12 PM IST

COVID 19 in TN: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஜனவரி 3) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 898 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டிலிருந்த ஆயிரத்து 727 நபர்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த ஒருவருக்கும் என ஆயிரத்து 728 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஐந்து கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 969 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 27 லட்சத்து 52 ஆயிரத்து 856 நபர்கள் கரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 10 ஆயிரத்து 364 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மருத்துமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் 662 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து ஐந்தாயிரத்து 696 என உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் ஒரு நோயாளி, அரசு மருத்துவமனையில் ஐந்து நோயாளிகள் என ஆறு பேர் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர்.

இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 796 என உயர்ந்துள்ளது. சென்னையில் 876 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 158 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 105 நபர்களுக்கும், திருவள்ளூரில் 80 நபர்களுக்கும் என அதிக அளவில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் தொற்று 121 என உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 100 பேர் குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர். மேலும் 18 பேர் குணமடைந்துவருகின்றனர். அதில் மூன்று பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டம்; ஜிஎஸ்டி கணக்கு ரத்து - அமைச்சர் மூர்த்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.