சென்னை தண்டையார்பேட்டை, நேரு நகர் பகுதியைச்சேர்ந்தவர், ஏஜாஸ் (17). இவர், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சக மாணவர்கள் மூன்று பேருடன் சேர்ந்து காசிமேடு N4 வார்ப்பு பகுதியிலுள்ள மேட்டில் இருந்து மூன்று பேரும் கடலுக்குள் குதித்துள்ளனர்.
அப்போது ஏஜாஸ் கடலில் தத்தளித்துக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும்போது, சகமாணவர்கள் யாரும் காப்பாற்றாமல் கடலில் மூழ்கியவரைப் பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கும் வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இன்றைய இளைஞர்கள் வீரசாகசம் செய்வதாக கிணற்றில் இருந்து குதிப்பது, கடலில் இருந்து குதிப்பது போன்ற காட்சிகளை சமூக வலைதளங்களில் விளையாட்டாக வெளியிட்டு லைக்குகளை பெறுவதற்காக வீர சாகசத்தில் ஈடுபடுகின்றனர்.
மேலும் இந்த மாணவர் நீச்சல் தெரியாமல் கடலில் குதித்தபோது காப்பாற்ற ஆட்கள் தாமதமாக வந்ததால், மாணவர் கடலுக்குள் மூழ்கி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் உடலை நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு, கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்றைய இளைஞர்கள் இதுபோன்று, உயிர் விஷயங்களில் விளையாட்டுச்செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று காவல் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அரசுப்பேருந்து மீது பைக் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு!