ETV Bharat / state

தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சம் - சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை : கரோனாவால் பாதிக்கப்பட்டும், கரோனா அறிகுறிகளுடனும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை எட்டியது.

கரோனா
கரோனா
author img

By

Published : Aug 14, 2020, 12:49 PM IST

கடந்த மார்ச் மாதம் தொடங்கி, இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், குறிப்பாக தமிழ்நாட்டில் கரோனாவின் தீவிரம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் சீரிய பணிகளால் நோய்த் தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று படிப்படியாகக் குறைந்து வருகிறது.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றோடு 17 லட்சத்தைக் கடந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், மாநகராட்சி நிர்வாகத்தின் தொய்வில்லாத களப்பணிகளினாலும், ஊழியர்கள், அலுவலர்கள், தன்னார்வலர்கள் என அனைவரின் கூட்டு முயற்சியாலும் இது சாத்தியமாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சென்னை விமான நிலையத்தில் தொடர்கதையாகி வரும் போதைப்பொருள் கடத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.