ETV Bharat / state

வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை - அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்

சென்னை: வைகை ஆற்றின் குறுக்கே 17 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணிக்கு காணொலி வாயிலாக முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

chennai
chennai
author img

By

Published : Sep 19, 2020, 3:51 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, வைகை ஆற்றின் குறுக்கே 17 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

சுமார் 7 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருமங்கலம் பிரதான கால்வாயின் 1ஆவது கிளைக் கால்வாயினை புனரமைக்கும் பணி மற்றும் தென்காசி மாவட்டம், சீவலப்பேரி குளத்தின் நடைபாதை அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்தத் தடுப்பணை கட்டப்படுவதால் மாடக்குளம் கண்மாய், கீழமாத்தூர் கண்மாய் மற்றும் துவரிமான் கண்மாய் ஆகிய கண்மாய்களில், அதன் மொத்த கொள்ளளவான 215.89 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிப்பது உறுதி செய்யப்படுவதோடு, 3360.13 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

இதனால், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பொன்மேனி, எல்லீஸ்நகர், பழங்காநத்தம், எஸ்.எஸ்.காலனி, மாடக்குளம், டி.வி.எஸ் நகர் ஆகிய பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியடைவதுடன் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், திருமங்கலம் பிரதான கால்வாயின் 1ஆவது கிளைக் கால்வாயை 6 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி மற்றும் தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், சீவலப்பேரி குளத்தைச் சுற்றி 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கும் பணி, என மொத்தம் 24 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 நீர்வள ஆதாரத் துறையின் திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

காணொலி மூலம் அடிக்கல் நாட்டல்
காணொலி மூலம் அடிக்கல் நாட்டல்

பொதுப்பணித் துறையில் 2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டுகளுக்கான 148 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

இதையும் படிங்க: குதிரை வண்டி பயணம்! தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.