முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம்
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன்.16) டெல்லி செல்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக பிரதமர் மோடியை, அவர் சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஹால் மார்க்' முத்திரை கட்டாயம்
தங்க நகையின் தரத்தை குறிக்கும் 'ஹால் மார்க்' முத்திரை கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக, 256 மாவட்டங்களில் இன்று (ஜூன் 16) முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலத்திட்டங்கள்
கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஜூன் (ஜூன்.16) தொடங்கி வைக்கிறார்.
100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி
புதுச்சேரியில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதையடுத்து, இன்று (ஜூன் 16) முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு
காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று (ஜூன் 16) தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ்.எஸ். சிவசங்கர், மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
டீசல் விலை உயர்வு
சென்னையில் இன்று (ஜூன் 16), பெட்ரோல் லிட்டருக்கு 97.91 ரூபாய், டீசல் லிட்டருக்கு 92.04 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.