பல்வேறு நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியாவிற்கு சுற்றுலா நுழைவு இசைவில் வந்திருந்தனர். இவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு மார்ச் மாதம் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இந்த ஊரடங்கு உத்தரவை வருகின்ற மே மாதம் 3ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது.
பன்னாட்டு, உள்நாட்டு விமானங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. விமானங்கள் ரத்துசெய்யப்பட்டதால் இந்தியாவிற்கு சுற்றுலாவந்த பயணிகள் மீண்டும் தங்கள் நாட்டிற்குச் செல்லமுடியாமல் தவித்தனர்.
அமெரிக்கா, ஃபிரான்ஸ், மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், பூட்டான் உள்பட பல நாடுகளிலிருந்து சுற்றுலாவந்த பயணிகளைத் திரும்பி அழைத்துச் செல்ல சிறப்பு விமானங்கள் கடந்த சில தினங்களாக சென்னையிலிருந்து இயக்கப்பட்டுவருகின்றன.
தமிழ்நாட்டில் தங்கி உள்ள மேலும் சில வெளிநாட்டுப் பயணிகளைச் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தங்கியிருந்த வங்கதேசம் நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். விமானத்தில் ஏழு குழந்தைகள், 69 பெண்கள் உள்பட 169 பேர் புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: பரிசோதனைக்கு உடன்படாமல் பதுங்கியிருந்த வெளிநாட்டவர் கைது.!