ETV Bharat / state

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்! - 16 resolutions in admk gc

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்!

author img

By

Published : Jul 11, 2022, 4:11 PM IST

சென்னை: இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பின் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  1. அதிமுக அமைப்பு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்.
  2. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துதல்.
  3. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச்செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்.
  4. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்.
  5. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரை நடைபெறவுள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல்.
  6. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்வது.
  7. அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்.
  8. மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளும், எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செயல்பட்ட அதிமுக அரசின் வரலாற்று வெற்றிகளும்.
  9. அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசிற்கு கண்டனம்.
  10. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மக்கள் விரோத திமுக அரசுக்கு கண்டனம்.
  11. சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.
  12. மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தல்.
  13. இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தல்.
  14. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய பழைய ஓய்வூதிய திட்டம், வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தல்.
  15. நெசவாளர் துயர் துடைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தல்.
  16. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்புணர்ச்சியோடு அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம்.
    உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் ஆவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.