சென்னை: இரண்டாவது நாள் சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.
இதில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, " திமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்கள் மட்டுமல்லாது அறிவிக்கபடாத பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு சான்றாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு நிவாரணமாக வழங்கி வருவதாக கூறினார். இதுபோன்று வேளாண் துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதுவரை 16 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், 12 லட்சம் விவசாயிகளுக்கு ரசீது வழங்கப்பட்டுள்ளளது என்றார்.
இதையும் படிங்க: ஆளுநர் உரை...மு.க.ஸ்டாலின் புகழ்பாடும் உரை - எல். முருகன்