ETV Bharat / state

இலங்கை சிறையில் இருந்த 16 தமிழக மீனவர்கள் சென்னை வருகை.. அரசு அதிகாரிகள் வரவேற்பு; பாஜகவுக்கு அனுமதி மறுப்பு!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 31, 2023, 7:21 AM IST

சென்னை: நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் மார்ச் 12ம் தேதி நடுக்கலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 16 பேரையும் கைது செய்து, அவர்களின் 2 படகுகள் மீன்பிடி வலைகள் போன்றவர்களையும் பறிமுதல் செய்தனர்.

அதன் பின்பு மீனவர்கள் 16 பேரையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர். தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்களின் குடும்பத்தினர் மத்திய மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்தனர். முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அவசர கடிதங்கள் எழுதினார்.

இந்த நிலையில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம் முதலில் 12 நாகை மீனவர்களையும் அடுத்த சில தினங்களில் 4 புதுக்கோட்டை மீனவர்களையும் விடுதலை செய்து அவர்களை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதற்கு இடையே இந்திய தூதரக அதிகாரிகள் தமிழ்நாடு மீனவர்கள் 16 பேருக்கும் அவசரக்கால சான்றிதழ் வழங்கி அவர்கள் அனைவருக்கும் விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்தனர். அதன் பேரில் 16 தமிழக மீனவர்களும் வியாழன் அன்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்றனர். அதன்பின்பு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் மீனவர்கள் ஏற்றப்பட்டு அவர்களின் சொந்த ஊரான நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே சென்னை விமான நிலையத்தில் 16 பேரையும் வரவேற்று அவர்களுக்கு உணவு மற்றும் பழங்கள் வழங்க வந்த பாஜகவினரை அனுமதிக்காமல் வேகமாக 16 பேரையும் அரசு அதிகாரிகள் வேனில் ஏற்றியதால் பாஜகவினருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் காவல் துறையினர் அவர்களைச் சமரசம் செய்து வைத்தனர்.

இதையும் படிங்க: பழவேற்காடு அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெற்ற ஊழியர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.