ETV Bharat / state

சென்னையில் இன்று 16 விமானங்கள் ரத்து - விமான போக்குவரத்து துறை அமைச்சகம்

பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததன் காரணமாக இன்று ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 16 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

16 domestic flights canceled at Chennai airport due to corona spread

author img

By

Published : Mar 16, 2021, 10:01 AM IST

சென்னை: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக முற்றிலுமாக முடங்கியிருந்த பயணிகள் விமான சேவைக்கு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி விமானங்கள் இயக்கப்பட அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து ஒரு நாளுக்கு வருகை, புறப்பாடு என 270 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வந்தன. பயணிகள் எண்ணிக்கையும் நாளொன்றுக்கு 25 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை இருந்தது.

இதற்கிடையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பயணிகள் அனைவரும் தகுந்த இடைவெளி, கிருசிநாசினி, கட்டாயமாக முகக் கவசங்கள் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் இல்லையேல் அவர்கள் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் எச்சரித்தது.

இதனால், சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. மேலும், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று 109 புறப்பாடு விமானங்கள், 111வருகை விமானங்கள் என மொத்தம் 220 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், இன்று (மார்ச்.16) சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களில் பயணிக்க 8,400 பேரும், வருகை விமானங்களில் பயணிக்க 7,200 பேரும் என மொத்தம் 15,600 போ் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனா். அதோடு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 16 விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, காலை 6.15 மணி அகமதாபாத், காலை 6.30 மணி புனே, காலை 6.50 மணி மும்பை, காலை 7.40 மணி சீரடி, காலை 9.05 மணி கொச்சி, காலை 10 மணி பெங்களூா், மாலை 5.20 மணி சூரத், இரவு 9.20 மணி டில்லி ஆகிய எட்டு புறப்பாடு விமானங்களும், எட்டு வருகை விமானங்களும் என மொத்தம் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீண்டும் சென்னையில் வேகமாக அதிகரித்து வரும் கரோனா பரவலே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.