ETV Bharat / state

33ஆவது தடுப்பூசி முகாமில் 16.86 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

author img

By

Published : Aug 7, 2022, 10:48 PM IST

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற 33ஆவது சிறப்பு மெகா கோவிட்- 19 தடுப்பூசி முகாமில் 16.86 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

33 வது  தடுப்பூசி முகாமில் 16.86 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டது - மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 1 லட்சம் சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

இதுவரை நடைபெற்ற 32 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 4 கோடியே 79 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி, 12-14 வயதுயுடைவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இதுவரை (7-8-2022) 19,58,849 (92.35%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 14,30,949 (67.47%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 15-17 வயதுயுடைவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இதுவரை (7-8-2022) 30,47,620 (91.08%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 25,68,937 (76.78%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை வழங்கும் திட்டத்தில் இதுவரை (7-8-2022) மொத்தம் 49,86,790 (12.62%) பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட 16,86,236 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் தவணையாக 1,72,321 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 4,28,432 பயனாளிகளுக்கும் மற்றும் 10,85,483 பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 95.94 விழுக்காடு முதல் தவணையாகவும் 89.37 விழுக்காடு இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மயிலாப்பூர் காரணீஸ்வரர் பகோடா தெருவில் அமைந்துள்ள மாநகராட்சி சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி முகாமினை நேரடி கள ஆய்வு செய்தார்.

மேலும், மாநிலத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமினை முன்னிட்டு நாளை கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெறாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அடுத்த மெகா கோவிட் தடுப்பூசி முகாம் 21.8.2022 நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:குமாரபாளையம்: வீடு திரும்பிய காவிரிக் கரையோர பொதுமக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.