ETV Bharat / state

கிருஷ்ணா நதி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்டது ஆந்திரா! - ஜீரோ பாயிண்டு, பூண்டி ஏரி

சென்னை: ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கன அடி கிருஷ்ணா நதி நீரை ஆந்திர அரசு திறந்துவிட்டது .

சென்னை குடிநீருக்காக கிருஷ்ணா நதியிலிருந்து 1500 கன அடி  நீர் திறப்பு

author img

By

Published : Sep 19, 2020, 1:28 AM IST

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீரை சென்னை குடிநீருக்காக வழங்க தமிழ்நாடு-ஆந்திர அரசுகளின் நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் வழங்கப்பட வேண்டும்.

அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலையில் திறக்கப்பட வேண்டிய தண்ணீர், காலதாமதமாக செப்டம்பர் 25இல் திறக்கப்பட்டது. இந்த பருவத்திலும் ஜூலையில் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் இதுவரை திறக்கப்படாததால், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலர்கள், கடந்த மாதம் 30ஆம் தேதி திருப்பதியில் ஆந்திர பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில், செப்டம்பர் 14ஆம் தேதி கண்டலேறு அணை 30 டிஎம்சி நிரம்பிய உடன் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டது.

ஆனால், 14ஆம் தேதியை கடந்தும், கண்டலேறு அணை 30 டிஎம்சியை தாண்டியும் ஆந்திர அரசு தண்ணீர் திறக்காததால், மீண்டும் ஆந்திர பொதுப்பணித்துறை அலுவலர்களிடம், தமிழ்நாடு அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில், முதலமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட ஒப்புதல் அளித்ததையடுத்து, நேற்று காலை கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த பருவத்திற்கான 8 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீர், இன்னும் மூன்று நாட்களில் தமிழ்நாடு எல்லையான ஜீரோ பாயிண்டுக்கு வந்து சேரும் எனவும், அதன்பின், பூண்டி ஏரியில் சேமிக்கப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்படும் என தமிழ்நாடு பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.