தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா நாட்டில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கேரளாவிலிருந்து வந்த 2 நபர்களுக்கும் பங்களாதேஷ் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் தமிழ்நாட்டில் இருந்த 1466 நபர்கள் என 1472 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஜூன் 26ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 25 ஆயிரத்து 591 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பினை கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 1472 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டது முதல் தற்போது வரை 6 கோடியே 58 லட்சத்து 64 ஆயிரத்து 772 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுநாள் வரை தமிழ்நாட்டில் 34 லட்சத்து 68 ஆயிரத்து 344 பேர் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரிய வந்தது. இவர்கள் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 7458 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த 691 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைத் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் 624 நபர்களும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 741 நபர்களும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 104 நபர்களும் திருவள்ளூர் மாவட்டத்தில் 85 நபர்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 49 நபர்களும் திருநெல்வேலி மாவட்டத்தில் 46 நபர்களும் என 37 மாவட்டங்களிலும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பரவத் தொடங்கி 1472 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் நபர்களின் எண்ணிக்கையில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மாநில அளவில் 5.5 விழுக்காடாக உள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தூத்துக்குடி, செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்டத்தில் 10.3 விழுக்காடு பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.