12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழிப்பாடத்தில் 14 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் மொழிப் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விவரம் கிடைத்துள்ளது. தமிழ் மொழிப் பாடத்தில் 14 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 24 மாணவர்கள் சமஸ்கிருதம், 7 மாணவர்கள் அரபி , 2 மாணவர்கள் ஹிந்தி என மொழி பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழில் 100க்கு 100 பெற்ற மாணவர்களின் விவரம்:
- ஆதேர்ஸ், கருமன்கூடல் நவஜோதி மெட்ரிகுலேஷன் பள்ளி, கன்னியாகுமரி
- மாலினி, நெய்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப்பள்ளி , திண்டுக்கல்
- மிரித்திகா, கணபதி எஸ் இ எஸ் டுடே சன் மேல்நிலைப்பள்ளி , கோயம்புத்தூர்
- ஸ்ரீராம், குப்பாண்டபாளையம் ரிலையன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி , நாமக்கல்
- சௌந்தர்ராஜ், செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , புதுக்கோட்டை
- யோக பிரியா , அய்யர்மலை கரூர் மவுண்ட் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி , கரூர்
- துர்கா, மேலப்புதூர் செயின்ட் அன்னிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி , திருச்சி
- சுவிதா, குயிலாப்பாளையம் மேல்நிலைப்பள்ளி , திண்டிவனம்
- அனுமித்ரா, ஓரிக்கை பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி , காஞ்சிபுரம்
- ரம்யா, ஸ்ரீ நாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி , காஞ்சிபுரம்
- தீபஸ்ரீ, மாங்காடு என் ஏ வி பாரத் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி , காஞ்சிபுரம்
- கீர்த்தனா, ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி , திருவள்ளூர்
- மிதுனா வர்ஷினி, அம்பத்தூர் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி , திருவள்ளுர்
- மோகனா, ஆவடி நாசரேத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி...