ETV Bharat / state

பொறியியல் தரவரிசையில் 133 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆப் - சென்னை மாவட்ட செய்திகள்

பொறியியல் தரவரிசையில் 133 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆப் பெற்ற நிலையில் 120 மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பொறியியல் தரவரிசை
பொறியியல் தரவரிசை
author img

By

Published : Aug 16, 2022, 4:06 PM IST

சென்னை, இளங்கலை பொறியியல் படிப்பில் பிஇ, பிடெக் படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலில் 133 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆப் பெற்றுள்ளனர். கடந்தாண்டில் 13 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆப் பெற்ற நிலையில் 120 மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

2022-23ம் ஆண்டிற்கான இளங்கலை பிஇ, பிடெக் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். இதில் பொதுப் பிரிவில் 1,56,278 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 133 பேர் 200க்கு 200 கட் - ஆப் பெற்றுள்ளனர். 468 பேர் 199 முதல் 200 வரையும், 3,023 பேர் 195 முதல் 199 வரையும் கட் - ஆப் பெற்றுள்ளனர். தொழிற்கல்விப் பிரிவில் ஒரு மாணவர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 22 ஆயிரத்து 587 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இதில் பிருந்தா 200க்கு 200 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

விளையாட்டுப் பிரிவில் 1258 மாணாக்கருக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இதில் மமதிஷியா, கார்த்திகேயனி, ரிஷப் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்திய அறிவுசார் அமைப்புகளுக்காக சென்னை ஐஐடியில் புதிய மையம் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.