ETV Bharat / state

உக்ரைனிலிருந்து 132 மாணவர்கள் இன்று சென்னை வருகை!

உக்ரைனில் இருந்து டெல்லி வழியாக 7 விமானங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 132 பேர் இன்று (மார்ச் 4) சென்னை வந்தடைந்தனர்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/04-March-2022/14632598_return.mp4

author img

By

Published : Mar 4, 2022, 10:33 AM IST

சென்னை: ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து ஒன்றிய அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானங்களின் மூலமாக இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இதுவரை 143 மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஐந்தாவது நாளாக இயக்கப்பட்ட 7 சிறப்பு விமானங்களின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 132 மாணவர்கள் சென்னை வந்தடைந்தனர்.

அவர்களை தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் உள்ளிட்ட அலுவலர்கள் வரவேற்றனர். பின்னர் மாணவர்கள் அனைவரும் அரசு செலவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னைக்கு வந்த 10 பேர் கோவைக்கு, 8 பேர் திருச்சிக்கும் 6 பேர் திருவனந்தபுரத்திற்கும் விமானம் முலம் தமிழக அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

செய்தியாளர்களிடம் அரசு அலுவலர், மாணவர்கள் பேசியது தொடர்பான காணொலி

இதுகுறித்து அயலக நலத்துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் பேசுகையில், “இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 393 பேர் வந்துள்ளனர். மேலும் 15 விமானங்கள் இந்தியர்களை அழைத்து வருகின்றன. அவற்றில் அதிகளவிலான தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். கார்கிவ் பகுதியில் இருந்து மாணவர்கள் வெளியேற தொடங்கியுள்ளனர். சுமி பகுதியில்தான் மாணவர்கள் அதிகளவில் உள்ளனர்.

இந்திய வெளியுறவு துறையினரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். சுமியில் 68 தமிழ்நாட்டு மாணவர்கள் உள்ளனர். கார்கிவ் நகரில் இருந்து முழுமையான மாணவர்கள் வந்து சேரவில்லை” என்றார்.

இந்நிலையில் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், அரசின் தரப்பில் தங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். மாணவர்கள் பேசுகையில், “உக்ரைனின் மேற்கு பகுதியில் பாதிப்பு இல்லை. ஆனால், நாங்கள் தங்கியிருந்த பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த விமான நிலையம் ரஷ்ய படையினரால் தாக்கப்பட்டது.

போர் பகுதியில் உள்ள இந்திய மாணவர்கள் வர முடியாத நிலை உள்ளது. ரயிலில் ஏற முயற்சிக்கும் இந்திய மாணவர்களை, உக்ரைனியர்கள் அனுமதிப்பதில்லை. இதனை ஒன்றிய அரசு கவனத்தில் கொண்டு மாணவர்களை மீட்க வேண்டும். உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள மாணவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.

சுமி என்ற பகுதியில் மாணவர்கள் உணவில்லாமல் தவிக்கின்றனர். இந்திய தூதரகத்தின் சார்பில் மாணவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். போலந்து எல்லையில் வட இந்தியர்கள், தென் இந்தியர்கள் பிரச்னை எழுப்பப்படுகிறது. சிறப்பு விமானங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் தருகின்றனர்” என்றனர்.

இதையும் படிங்க: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.