ETV Bharat / state

25 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் - திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம்

இன்று நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில், பாஜக அரசுக்கு மாற்றாக களமாடி வரும் இந்தியா கூட்டணிக்கு வாழ்த்துக்கள் எனவும், 25 லட்சம் புதிய உறுப்பினர்களை திமுக இளைஞரணியில் சேர்க்க வேண்டும் என்பது உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 29, 2023, 1:12 PM IST

சென்னை: திமுக இளைஞர் அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட, மாநில மற்றும் மாநகர அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இன்று (ஜூலை29) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதற்கு திமுக இளைஞர் அணியின் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். அதேநேரம், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

  1. கருணாநிதியின் புகழ் பரப்பும் முதலமைச்சருக்கு நன்றி. கருணாநிதி நூற்றாண்டில், அவரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்திட பொதுமக்கள் பயனடையும் வகையில், ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு செய்திருக்கிறது அரசு.
  2. கட்டணமில்லா மகளிர் பேருந்து பயணத் திட்டத்தில் இன்று நாளொன்றுக்கு 49 லட்சம் பயணங்கள் என இதுவரை மொத்தம் 312 கோடி கட்டணமில்லா பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். `புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 21 ஆயிரத்து 289 மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக இந்த கூட்டம் நன்றி தெரிவித்து மகிழ்கிறது.
  3. தமிழ்நாடெங்கும் மகளிர் எதிர்பார்த்த மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் புரட்சிகரத் திட்டத்திற்கு செயல்வடிவம் தந்துள்ளார், நம் முதலமைச்சர். மகளிருக்கான சொத்துரிமையை பெரியார், அம்பேத்கரின் வழி நின்று உறுதி செய்த கருணாநிதியின் பெயரில் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” என பெயரிட்டு, அத்தகைய பெருமைமிகு திட்டத்தைப் அண்ணா பிறந்த செப்டம்பர் 15ஆம் நாள் முதல் வழங்க உள்ள முதலமைச்சருக்கு இளைஞர் அணியின் இந்த மாவட்ட, மாநில மற்றும் மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நன்றி தெரிவித்து மகிழ்கிறது.
  4. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் கட்சியின் எதிர்காலத்திற்காகவும் நம் திமுக தலைவரால் உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்டதுதான் எழுச்சிமிகு இளைஞர் அணி. 43 ஆண்டுகள் கடந்து இயக்கத்துக்கு புது ரத்தம் பாய்ச்சி, அவர்களை வளர்த்தெடுக்கும் நாற்றங்காலாய் விளங்கும் இளைஞர் அணியின் பணிகளை மாவட்ட, மாநில, மற்றும் மாநகர அளவில் ஒருங்கிணைக்கக் கூடிய புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க முழு ஒத்துழைப்பை வழங்கிய தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கும் இந்த கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
  5. திராவிட இயக்கத்தின் கொள்கைப் பாதையில் இளைஞர்களை வளர்த்தெடுக்கும் பாசறையாகச் செயலாற்றி வருகிறது, இளைஞர் அணி. அத்தகைய செயலாற்றல்மிகு அணியில் சேர ஆர்வமுள்ள 16 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை இல்லந்தோறும் சென்று அணியில் உறுப்பினராக இணைத்திடும் `இல்லந்தோறும் இளைஞர் அணி’ என்ற முன்னெடுப்பை முதன்மையானதாக ஏற்றுச் செய்திட வேண்டும் என மாவட்ட, மாநில, மாநகர, அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை இந்தக் கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இதில், 25 லட்சம் புதிய இளைஞர் அணி உறுப்பினர்களைச் சேர்ப்பது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
  6. பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் தன் வாழ்நாள் முழுவதும் ஆதிக்கவாதிகளுக்கு எதிராக நின்று தமிழ் பெரும் நிலத்தின் சுயமரியாதையைக் காத்து நின்றவர். தான் கொண்ட கொள்கையிலிருந்து சற்றும் விலகாத கருணாநிதியின் நூற்றாண்டில், அவர் உயர்த்தி பிடித்த இயக்கக் கொள்கைகளை சமூக நீதித் திட்டங்களை இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் “கலைஞர் 100 - திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை” ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அளவில் தொடர்ந்து நடத்துவது என இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
  7. திமுக ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், சமூகப் பணிகளை என்றும் விடாது தொடர்கிறது இளைஞர் அணி. அதன் தொடர்ச்சியாக இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடெங்கும் மரக்கன்றுகள், பனை விதைகள் நடுதல், சுற்றுச்சூழல் காக்க தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல், தனியார் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துதல், ரத்ததான முகாம்கள், தேவையுள்ளோருக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவிகள் வழங்குதல் என மக்கள் பயனடையும் வகையிலும், கட்சிக்கு பெருமை சேர்த்திடும் வகையிலும், மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
  8. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் வங்கிப் பணிகளில், எழுத்தர் (Clerk) பணிக்கு மாநில மொழி அறிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பை மத்திய அரசின் வங்கிப் பணியாளர் தேர்வுக் கழகம் (IBPS) கடந்த சில ஆண்டுகளாக விளம்பரப்படுத்தி வருகிறது. தற்போது 2022 - 2023ஆம் ஆண்டுக்கான எழுத்தர் பதவி நியமனங்களுக்கு தேர்வுகள் நடைபெற்று, 288 பேர் எழுத்தர் பதவிகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர். 2017ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படும் இந்த நடைமுறையால் 400க்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தவர் இவ்வாறு வங்கிப் பணிகளில் சேர்ந்துள்ளனர். கிராமம் மற்றும் சிறு நகர வங்கிகளில் தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவரின் பணி நியமனங்கள், ஏழை-எளிய மக்கள் தங்களுக்கான சேவையைப் பெறுவதில் மொழி ரீதியிலான பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பும் பறிக்கப்படுகிறது. வங்கிப் பணியாளர் தேர்வுக் கழகத்தின் இந்த நடைமுறையை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. அதே வேளையில், இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டியும் இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.
  9. நீதியை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை, தங்களின் கொடுங்கரங்களாக மாற்றி, எதிர்த்து குரல் கொடுக்கும் இயக்கங்கள், எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் மீது ஏவும் சட்ட விரோத பழிவாங்கும் போக்கைக் கையாண்டு அரசியல் லாபம் அடையத் துடிக்கும் மத்திய பாஜக அரசின் கோழைத்தனமான போக்கை இளைஞர் அணியின் மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பி வைத்த தீர்மானங்களை முடக்கி வைப்பது, அண்ணா தமிழ் நிலப்பரப்புக்குத் `தமிழ்நாடு’ என வைத்த பெயரை மாற்ற முனைவது, அதிமுக அமைச்சர்களின் ஊழல் வழக்குகளைக் கிடப்பில் போடுவது, பொது வெளியில் சமூகநீதிக்கு எதிராக கருத்துகளைத் தெரிவிப்பது என ஆளுநராகச் செயல்படாமல் அரசியல்வாதியாகச் செயல்படத் துடிக்கும் தமிழ்நாடு ஆளுநருக்கு இளைஞர் அணியின் இந்தக் கூட்டம் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
  10. காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக 2002ஆம் ஆண்டில் இரண்டு சமூக மக்களிடையே உருவாக்கப்பட்ட கலவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அன்றைய குஜராத் முதலமைச்சர் மோடி, தற்போது பிரதமராக, மணிப்பூரில் இரண்டு இனக் குழுக்களுக்கு இடையிலான கலவரத்தையும் கண்டு கொள்ளாமல் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார். மணிப்பூரில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டும், குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போதும் அதைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்காமல், 73 நாட்கள் வாய் மூடிக் கிடந்தார் பிரதமர் மோடி .பாஜக ஆளும் மாநிலத்தில்தான் இத்தகைய நிலை நீடிக்கிறது, `டபுள் எஞ்சின் கவர்ன்மென்ட்’ என்று மார்தட்டிக் கொள்ளும் பாஜக அரசின் வெறுப்பு பிரச்சாரம்தான் மணிப்பூரை பற்றி எரியச் செய்திருக்கிறது. மே மாதம் முதல் அங்கு இணைய சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை 150க்கும் மேற்பட்டோர் இறந்தும், பெண்கள் பலர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பின்னரும், வாய் திறக்காத பிரதமர் மோடி, இன்று போலித்தனமாக ஊடகங்களுக்கு முன் முதலைக் கண்ணீர் வடிக்கிறார். இதற்கு இக்கூட்டம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறது.
  11. வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சமூகப் பாதுகாப்பின்மை, கேள்விக்குறியாகும் மகளிர் சுதந்திரம், பறிபோகும் சிறுபான்மையினர் உரிமைகள், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல் என மத்திய பாஜக அரசின் பிற்போக்கு அலங்கோல அரசியலால் கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவின் ஜனநாயக மாண்புகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இந்த மக்கள் விரோத பாஜக அரசுக்கு மாற்றாக, ‘இந்தியா’ என்ற ஜனநாயகம் காக்க களமாடி வரும் கூட்டணிக்கு வாழ்த்துக்கள்.
  12. மத்திய பாசிச பாஜக அரசின் வகுப்புவாத சாதிய பிற்போக்கு அரசியலால் இந்திய நாட்டை இருள் சூழ்ந்துள்ளது. நாட்டின் விடியலை உறுதி செய்ய, 2024 மக்களவைத் தேர்தலில் பாசிச பாஜக, அடிமை அதிமுக கூட்டணியை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. 2024 மக்களவைத் தேர்தல் பணிகளில் இளைஞர் அணியினர் ஒவ்வொருவரும் முழுமூச்சாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. நாற்பதும் நமதே, நாடும் நமதே என்பதை உறுதி செய்யும் வகையில், நாம் பாடுபடுவோம் என இந்தக் கூட்டம் உறுதியேற்கிறது.
  13. 1980 ஜூலை 20 அன்று மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உருவான இளைஞர் அணி, இன்று ஆதிக்கவாதிகளை விரட்டியடிக்கும் கொள்கைப் பாசறையாகவும், தமிழர்களுக்கான உரிமை காக்கும் போராட்டத்தில் களமாடும் போர்ப்படையாகவும், வெற்றிக்காக இளைஞர்களை அரசியல்மயப்படுத்தி வளர்த்தெடுத்திடும் களமாகவும் உள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு திருவெல்வேலியில் முதல் இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது. தற்போது இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்துவதற்கான அனுமதியை ஸ்டாலின் வழங்கி உள்ளார். இளைஞர் அணியின் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கியுள்ள திமுக தலைவருக்கு இளைஞர் அணியின் இந்த மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. தலைவரின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில், 10 லட்சம் இளைஞர்களை பங்கேற்கச் செய்து மாநாட்டுப் பணிகளை சிறப்புற மேற்கொள்ள இந்தக் கூட்டம் உறுதியேற்கிறது.

இதையும் படிங்க: ‘காங்கிரஸ் - திமுக என்றாலே ஊழல் தான் நினைவிற்கு வரும்’ - அமித் ஷா விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.