தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 2020-21ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மே மாதம் 3ஆம் தேதிமுதல் 21ஆம் தேதிவரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான வகுப்புகள் காலதாமதமாகத் தொடங்கின. ஆன்லைன் முறையில் மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டுவந்தன.
அதனைத் தொடர்ந்து தற்போது மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. மேலும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கான பாடத்திட்டமும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், காலை 10 மணிக்குத் தொடங்கும் தேர்வு 1.15 வரை (தேர்வு: 3 மணி நேரம்) நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் கேள்வித்தாளை படிப்பதற்கு 10 நிமிடம் (காலை 10 மணி முதல் 10.10 வரை), விடைத்தாளைப் பூர்த்திசெய்ய ஐந்து நிமிடம் போன்ற வழக்கமான சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு அட்டவணை
- மே 3 - தமிழ் (மொழித்தாள்)
- மே 5 - ஆங்கிலம்
மே 7 - நடைபெறும் தேர்வுகள்
- கணினி அறிவியல்
- கொள்கைகளும் இந்திய கலாசாரமும்
- கணினி அறிவியல்
- கணினி பயன்பாடுகள்
- உயிரி வேதியியல்
- சிறப்புத் தமிழ்
- மனை அறிவியல்
- அரசியல் அறிவியல்
- புள்ளியியல்
மே 11 - நடைபெறும் தேர்வுகள்
- இயற்பியல்
- பொருளியல்
- கணினி தொழில்நுட்பம்
மே 17 - நடைபெறும் தேர்வுகள்
- கணிதம்
- விலங்கியல்
- வணிகவியல்
- ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாடு
- துணிநூல் & ஆடை வடிவமைப்பு
- உணவு சேவை மேலாண்மை
- வேளாண்மை அறிவியல்
- நர்சிங் (பொது)
- நர்சிங் தொழில்பிரிவு
மே 19 - நடைபெறும் தேர்வுகள்
- தாவரவியல்
- உயிரியல்
- வரலாறு
- வணிக கணிதம் & புள்ளியியல்
- அடிப்படை மின் பொறியியல் (பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்)
- அடிப்படை மின்னணு பொறியியல் (பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்)
- அடிப்படை கட்டுமான பொறியியல் (பேசிக் சிவில் இன்ஜினியரிங்)
- அடிப்படை ஆட்டோமொபைல் பொறியியல் (பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்)
- அடிப்படை இயந்திரவியல் பொறியியல் (பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)
- ஆடை தொழில்நுட்பம் (டெக்ஸ்டைல் டெக்னாலஜி)
- அலுவலக மேலாண்மை மற்றும் செயலரகம்
மே 21 - நடைபெறும் தேர்வுகள்
- வேதியியல்
- கணக்குப்பதிவியல்
- புவியியல்