ETV Bharat / state

சென்னையில் முகக்கவசம் அணியாத 121 நபர்களிடமிருந்து ரூ.60,500 அபராதம் வசூல்

சென்னையில் முகக்கவசம் அணியாத 121 நபர்களிடமிருந்து ரூ.60,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Jul 6, 2022, 10:30 PM IST

சென்னையில் முகக்கவசம் அணியாத 121  நபர்களுக்கு ரூ.60,500 அபராதம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சியின் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மாநகராட்சியின் சார்பில் அந்தந்த வார்டுக்குட்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து (இன்று 06) முதல் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன் படி ரூ.500/- அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் மாநகராட்சியின் குழுக்களின் மூலம் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத 121 நபர்களிடமிருந்து ரூ.60,500/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் விலையில்லா முகக்கவசம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.