கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே வேறு மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களை மீட்க மத்திய அரசு சார்பாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் டெல்லியிலிருந்து சென்னை வந்த சிறப்பு ரயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1,200 பேர் வந்தனர்; 312 பேர் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கினர். இதில் டெல்லி சமய மாநாட்டில் கலந்துகொண்ட 272 பேரும் அடக்கம். இவர்களை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தியுள்ளனர். எஞ்சியிருந்த 40 பேர் வண்டலூரை அடுத்த தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மற்ற பயணிகள் அனைவரும் திருச்சி மற்றும் திருநெல்வேலிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் சொந்த செலவில் சிறப்பு ரயிலில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!