ETV Bharat / state

பீர் ஏற்றுமதி மூலம் ரூ.120 கோடி வருவாய்

author img

By

Published : Mar 13, 2020, 2:15 PM IST

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு பீர் மதுபான ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்தாண்டு மட்டும் 120 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் உள்ளது.

Beer
Beer

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 13) மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கை நடந்துவருகிறது. 2016ஆம் ஆண்டுமுதல் 1000 தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லறை மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பீர் மதுபானத்தை உற்பத்தி செய்யும்பொருட்டு ஏழு மதுபான ஆலைகள் செயல்பட்டுவருகினறன. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுவரும் பீர்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது.

அந்தவகையில் 2015 - 16ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 15 ஆயிரம் பீர் பெட்டிகளும், 2016 -17ஆம் ஆண்டு ஐந்து லட்சத்து 56 ஆயிரத்து 490 பெட்டிகளும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

2019-20ஆம் ஆண்டில் 19 லட்சத்து 91 ஆயிரத்து 907 பீர் பெட்டிகள் வெளி மாநிலத்துக்கும், 26 ஆயிரத்து 918 பீர் பெட்டிகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகி அதன்மூலம் 120 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.