12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை நடைபெற்றது. கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனாலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என அரசு அறிவித்தது.
மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற கணக்குப்பதிவியல், புவியியல், வேதியியல் ஆகிய தேர்வுகளை 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல் வெளியாகியது. இதனையடுத்து அந்த மாணவர்களுக்கு மறு தேர்வு வைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.’
அதன்படி, மறுதேர்வு 27ஆம் தேதி (நாளை) நடைபெறுகிறது. 32 ஆயிரம் மாணவர்களுக்கான கேள்வி தாள்கள் தயார் செய்யப்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் 171பேரும், தனித்தேர்வு மானவர்கள் 572 பேரும் என 743 மாணவர்கள் மட்டுமே ஹால் டிக்கெட் பெற்றுள்ளனர். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் படித்த பள்ளியிலேயே 289 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.