ETV Bharat / state

கராத்தேவில் 11 வயது சிறுவனின் புதிய உலக சாதனை முயற்சி!

சென்னை: கடும் முயற்சியினால், கராத்தேவில் 11 வயது சிறுவன் புதிய உலக சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

karate
author img

By

Published : Jun 1, 2019, 9:02 AM IST

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக்(40), ஹேம ப்ரியா(40) தம்பதியினர். கார்த்திக் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். ஹேம ப்ரியா மருத்துவராக பணிப்புரிந்து வருகிறார்.

இவர்களது மகன் ராகுல் கார்த்திக்(11), முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட ராகுல், கராத்தே பயிற்சியை கடந்த நான்கு வருடங்களாக பயின்று வருகிறார்.

இந்நிலையில் உலக சாதனை முயற்சியாக ஐஸ் கட்டியின் மீது படுத்துக்கொண்டு அவரது வயிற்று பகுதியில் 25 கிலோ எடை கொண்ட 38 கற்களை 44 நொடிகளில் சுத்தியலால் உடைத்தும், 100 கிலோ எடை கொண்ட ஐஸ் கட்டியை உடைத்தும், புதிய உலக சாதனை முயற்சியை மேற்கொண்டார்.

ஏற்கனவே நியுசிலாந்தைச் சேர்ந்தவர் ஒரு நிமிடத்தில் 38 கற்களை உடைத்ததே சாதனையாக இருந்துள்ளது. அதனை முறியடித்த பள்ளி சிறுவன் ராகுலின் சாதனையை யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்டு பதிவு செய்தனர்.

கராத்தேவில் 11 வயது சிறுவனின் புதிய உலக சாதனை முயற்சி!

இது குறித்து ராகுலின் தாய் ஹேம ப்ரியா கூறுகையில், “இந்த சாதனை செய்வதற்கு எனது மகன் கடுமையாக உழைத்தார். அவரது புதிய சாதனையை மீண்டும் அவரே உடைத்து மேலும் புதிய சாதனையை செய்வார். இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த கராத்தே மாஸ்டர்ஸ் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றி. எனது மகனின் ஆறுமாத கடுமையான பயிற்சியினால் இச்சாதனையை செய்ய முடிந்தது என்றார்.

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.