சென்னை: இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு வரும் மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
இதற்கு முன்பாக செய்முறை தேர்வுகள் நாளை மறுநாள் (ஏப். 25) முதல் தொடங்கி மே 2ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் 11, 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கோடை விடுமுறை : அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய விளக்கம்