சென்னை: மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் சளி போன்ற கரோனா தொடர்பான அறிகுறியுடன் வரும் நபர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த ஏற்கனவே கடிதம் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சை பெற்றவர்களில் தனியார் மருத்துவமனைகளிலிருந்து 610, சி.டி ஸ்கேன் மையங்களிலிருந்து 92, நகர்ப்புற ஆரம்ப மற்றும் சமுதாய நல மையங்களிலிருந்து 467 மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்களின் கள ஆய்வில் 345 என 1514 பேரின் விவரம் பெறப்பட்டுள்ளது.
இவர்களில் 1507பேருக்கு RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 111 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒவ்வொரு மண்டலத்திலும் மருத்துவ வல்லுநர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தொடர்ந்து ஆய்வு செய்து விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 2,765 பேருக்கு கரோனா உறுதி-மேலும் ஒருவர் உயிரிழப்பு