சென்னை தீவுத்திடல் சத்தியா நகர் பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் என்ற நபர் அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை குடிசையில் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ரத்தக்கரையோடு இருந்த சிறுமி வயதுக்கு வந்துவிட்டதாக அவரது தாயார் மற்றும் உறவினர்கள் நினைத்திருந்த நிலையில், ரத்தம் நிற்காத காரணத்தால் சிறுமியிடமும், சிறுமியின் தோழிகளிடம் விசாரித்தபோது மணிகண்டன் என்ற நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், முத்தையால்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மணிகண்டனை தேடி வருகின்றனர்.